Showing posts with label வேண்டுதல். Show all posts
Showing posts with label வேண்டுதல். Show all posts

Sunday, 23 June 2013

வேண்டுதல்



விண்ணை விட்டு மண்ணில் வந்த
வியத்தகு தேவதையே,

மண்ணில் வந்த பயனறிந்து -உன்
மனதில் ஒரு இடம் கேட்டேன்,

அன்பு உள்ளமொன்றை தேடி தேடி
அதை உன்னிடத்தில் கண்டேனடி,

உனதுள்ளம் விட்டு எங்கு செல்வேன்

உன்னில் என்னை உணர்ந்து விடு,

என்னருகே  நீ  இருந்தால் இமயம் கூட எள்ளளவாம்
என்னைவிட்டு  நீ  பிரிந்தால் கண்ணீர் கூட கடலளவாம்,

பெண்ணாய் பிறந்த பெருந்தெய்வமே
பெற்ற பிள்ளையைபோல் எனை ஏந்திக்கோல்,

ஆனாய் பிறந்த பாவத்திற்கு -உன்
அன்பிலாவது வழ்ந்துவிட்டுபோகிறேன்.