உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
வலை பக்கம் தொடங்கி எழுத வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை இப்பொழுதுதான் செயல் வடிவம் பெற்றுள்ளது.வாழ்வு இனிமையானதுதான் நேசங்களால் நிறைக்கபடுகின்றபோது.
தாய் தந்தையரை,உடன்பிறந்தவர்களை,மனைவியை,உறவுகளை முதலில் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.நேசம் என்பது முதலில் குடும்பத்தில் துவங்கி பின்னர் நண்பர்கள்,சகமனிதர்கள்,சமுகம் என விரிய வேண்டும்.குடும்ப உறுபினர்களை நேசிக்காத ஒருவனால் சமுகத்தையும் மனிதர்களையும் நேசிக்க இயலாது என்பது என் எண்ணம். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" ஆம் நேசம் என்பது எல்லையற்றதாக இருக்க வேண்டும் இனம்,மதம்,மொழி,நாடு இவற்றை கடந்து மனிதம் என்ற ஒன்றை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.நேசித்து பாருங்கள் நீங்களும் நேசிக்கபடுவீர்கள் வாழ்வும் இனிமை பெரும்.
வலையுலகம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteNandri Nanbare.
Delete